Advertisement

நடக்க கூட முடியாத நிலையில் உள்ளாரா சமந்தா?

By: Nagaraj Fri, 25 Nov 2022 10:34:34 AM

நடக்க கூட முடியாத நிலையில் உள்ளாரா சமந்தா?

ஐதராபாத்: நடக்க கூட முடியாத நிலையில் நடிகை சமந்தா உள்ளார் என்று வெளியாகி உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது உண்மையா அல்லது வதந்தியா என்பதை சமந்தாதான் உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தென்னிந்தியளவில் மிக பெரியளவில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள சமந்தாவின் திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

samantha,health,rest,unable to walk,information ,சமந்தா, நலம், ஓய்வு, நடக்க முடியவில்லை, தகவல்கள்

அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள் சமந்தா சிகிச்சை பெற்று வந்தார். திடீரென அவரின் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் பரவின.

ஆனால் அவர் வீட்டில் நலமுடன் ஓய்வெடுத்து வருதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது சமந்தாவின் உடல்நிலை நடக்க முடியாத அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரால் சிறிது தூரம் கூட நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. இது உண்மையா என்பது தெரியவில்லை. சமந்தா தரப்பினர்தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

Tags :
|
|