Advertisement

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடி தமன்னாவா?

By: Nagaraj Sat, 13 Aug 2022 10:07:28 PM

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடி தமன்னாவா?

சென்னை: ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இளம் நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் தமன்னா என்று தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்று படக்குழுவினர்தான் சொல்லணும்.

பொதுவாகவே சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களில் நடிக்கும் நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பை படம் துவங்கும் முன்பே வெளியிட்டுவிடுவார்கள். ஆனால் ஜெயிலர் படத்தை பொறுத்தவரை இயக்குநராக நெல்சனும், இசையமைப்பாளராக அனிருத் மட்டுமே இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

இதன் காரணமாக ஜெயிலர் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து நாளுக்கு நாள் பல்வேறு தகவல்கள் பரவிவருகின்றன. முதலில் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று கூறப்பட்டது. எந்திரன் படத்துக்கு பிறகு சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் கூட்டணி இணையவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

fans,question,tamannaah,jailer,chance,jodi ,ரசிகர்கள், கேள்வி, தமன்னா, ஜெயிலர், வாய்ப்பு, ஜோடி


மேலும் இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும், சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் வருவார் எனவும் கூறப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் வசந்த் ரவி வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.

இதில் உச்சகட்டமாக ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. நடிகை தமன்னா 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழில் நடித்து வருகிறார். அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, விக்ரம், விஷால் என பெரும்பாலான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்.

ரஜினியுடன் மட்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் இருந்தது. தற்போது ஜெயிலர் மூலம் அந்த வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Tags :
|
|
|