- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆகிறதா?
ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆகிறதா?
By: Monisha Sat, 19 Dec 2020 09:29:14 AM
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வரும் பொங்கல் தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் தயாரிப்பாளர் தரப்பு செய்துகொண்டிருந்தது.
மேலும் இந்த படம் சமீபத்தில் சென்சாரில் யுஏ சான்றிதழ் பெற்றது. இந்த நிலையில் தற்போது 'மாஸ்டர்' திரைப்படம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு இந்தி உள்பட பல மொழிகளிலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் 2021 ஆம் ஆண்டின் முதல் மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும்.