Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மடோனா சபாஸ்டியனுக்கு விஜய்யின் அடுத்த படத்தில் முக்கிய கேரக்டராம்

மடோனா சபாஸ்டியனுக்கு விஜய்யின் அடுத்த படத்தில் முக்கிய கேரக்டராம்

By: Nagaraj Sat, 06 June 2020 2:03:30 PM

மடோனா சபாஸ்டியனுக்கு விஜய்யின் அடுத்த படத்தில் முக்கிய கேரக்டராம்

தளபதி 65 படத்தில் பிரேமம் படத்தில் நடித்த பிரபல நடிகை நடிக்கப் போவதாக தீயாய் தகவல் ஒன்று பரவி வருகிறது.

மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தியேட்டர்கள் திறப்புக்காக அந்த படமும் தமிழ் சினிமா ரசிகர்களும் காத்துக் கிடக்கின்றனர். சமீபத்தில், தயாரிப்பாளர் கேயார் மாஸ்டர் படம் முதல் படமாக ரிலீசாகக் கூடாது என கூறியிருந்தது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை கிளப்பியது.


vijay,pooja hegde,madonna sabastian,murugadoss ,விஜய், பூஜா ஹெக்டே, மடோனா சபாஸ்டியன், முருகதாஸ்

மாஸ்டர் படம் முதல் படமாக ரிலீசானால், தியேட்டரில் கூட்டத்தையோ, சமூக இடைவெளியையோ கடைபிடிக்க முடியாது என்ற நோக்கிலே தான் சொன்னதாகவும் கேயார் விளக்கம் அளித்திருந்தார். சிறு பட்ஜெட் படத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் விஜய்யின் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கப் போகிறார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ள தகவல் மட்டும் இதுவரை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

vijay,pooja hegde,madonna sabastian,murugadoss ,விஜய், பூஜா ஹெக்டே, மடோனா சபாஸ்டியன், முருகதாஸ்

தனது டிவிட்டர் பக்கத்திலும், சில மீடியாக்களுக்கும் பேட்டி அளித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கப் போவதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. இதற்கிடையில் தற்போது, பிரேமம் படத்தில் நிவின் பாலியை மணந்து கொள்ளும் ஹீரோயின் மடோனா சபாஸ்டியன் தளபதி 65 படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

Tags :
|