Advertisement

'சலார்' படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது... ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Sun, 14 Aug 2022 5:15:31 PM

'சலார்' படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது...  ரசிகர்கள் உற்சாகம்

ஹைதராபாத்: பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'சலார்' படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கேஜிஎப்' என்ற பிரம்மாண்ட படத்தையடுத்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் அடுத்த படம் 'சலார்'. இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தில் பிரபல நடிகர்கள் ஜெகபதி பாபு, பிரித்விராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

fans,curiosity,salar,5 languages,shooting,excitement ,ரசிகர்கள், ஆர்வம், சலார், 5 மொழிகள், படப்பிடிப்பு, விறுவிறுப்பு

ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இப்படம்‌ உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு 35 சதவீதம் நிறைவுபெற்றுள்ளதாக இயக்குனர் பிரசாந்த் நீல் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 12.58-க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த மாதிரியான அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Tags :
|
|