Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதை பின்பற்றும் மாளவிகா மோகனன்!

By: Monisha Thu, 02 July 2020 4:22:54 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதை பின்பற்றும் மாளவிகா மோகனன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் சசிகுமார் ஜோடியாக நடித்தவர் தான் மாளவிகா மோகனன். அந்த படத்தில் நடித்ததால் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசுதான் விஜய்யின் 'மாஸ்டர்' பட நாயகி கேரக்டர்.

'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகும் முன்னரே அவர் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் பாலிவுட்டில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அவருக்கு நயன்தாராவை விட அதிக சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

malvika mohanan,superstar rajinikanth,master movie,cinema,yoga ,மாளவிகா மோகனன்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,மாஸ்டர் படம்,சினிமா,யோகா

இந்த நிலையில் மாளவிகா மோகனன் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினியுடன் நிறைய நேரம் செலவிட முடிந்ததாகவும், அவர் ஆன்மீகம் பற்றி கூறியதை அறிந்து கொள்ள முடிந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், உடலையும் மனதையும் திடமாக வைத்துக்கொள்ள யோகா செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து ரஜினி தன்னிடம் கூறியதாகவும் குறிப்பாக கிரியா யோகாவின் முக்கியத்துவம் பற்றியும் அவர் கூறியதாகவும் குறிப்பிட்டார். மேலும், தான் இப்பொழுதும் அதனை பின்பற்றி வருவதாகவும் மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

Tags :
|