Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியாக வாய்ப்பு இல்லை; இயக்குநர் திட்டவட்டம்

மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியாக வாய்ப்பு இல்லை; இயக்குநர் திட்டவட்டம்

By: Monisha Wed, 23 Sept 2020 4:09:06 PM

மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியாக வாய்ப்பு இல்லை; இயக்குநர் திட்டவட்டம்

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தில் விஜயுடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் இயங்காததால், மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெளியீடு குறித்த கேள்விக்கு அந்த திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது:-

master movie,ott site,lokesh kanagaraj,release,actor vijay ,மாஸ்டர் திரைப்படம்,ஓடிடி தளம்,லோகேஷ் கனகராஜ்,ரிலீஸ்,நடிகர் விஜய்

"திரை அரங்குகளை திறந்த பின்னர் மாஸ்டர் படம் ரிலீஸாகும். மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி. தளங்களில் வெளியாக வாய்ப்பு இல்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

சமீபத்தில் சூர்யாவின் சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிட உள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து மாஸ்டர் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசனின் 232 என்ற படத்தை இயக்கவுள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags :