Advertisement

தமிழை அடுத்து தெலுங்கில் வெளியாகிறது மாஸ்டர் பட டீசர்!

By: Monisha Wed, 16 Dec 2020 2:36:07 PM

தமிழை அடுத்து தெலுங்கில் வெளியாகிறது மாஸ்டர் பட டீசர்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் டீசர் நவம்பர் 14ஆம் தேதி வெளிவந்தது. இந்த டீசர் யூடியூப் உள்பட சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது. மேலும், பார்வையாளர்கள் எண்ணிக்கையில் பல்வேறு சாதனைகளை முறியடித்தது.

இந்தநிலையில் 'மாஸ்டர்' திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு வருவதாகவும் இதற்கான டப்பிங் பணிகளும் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்ததாகவும் செய்திகள் வெளியாகியது.

lokesh kanagaraj,master,vijay,teaser,telugu ,லோகேஷ் கனகராஜ்,மாஸ்டர்,விஜய்,டீசர்,தெலுங்கு

அந்த வகையில் தற்போது தமிழை அடுத்து தெலுங்கிலும் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 'மாஸ்டர்' படத்தின் தெலுங்கு டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தெலுங்கு மாநிலங்களிலுள்ள தளபதி விஜய்யின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 'மாஸ்டர்' திரைப்படத்தின் தெலுங்கு டீசர் நாளை வெளியாக உள்ளதை அடுத்து இதுகுறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி உள்ளது.

Tags :
|
|
|