Advertisement

இன்று ஓடிடி-யில் வெளியாக இருக்கும் படங்கள்

By: vaithegi Fri, 10 Mar 2023 3:42:33 PM

இன்று ஓடிடி-யில் வெளியாக இருக்கும் படங்கள்

ஓடிடி-யில் 3 சூப்பர் ஹிட் படங்கள் ... ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் பல திரைப்படங்கள் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகி கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்று 3 தமிழ் திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அந்த 3 திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள்.

முதலாவதாக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் கவின், நடிகை அபர்ணா தாஸ் ஆகியோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 10 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “டாடா”. இத்திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனது. இப்படம் இன்று அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

images,otd ,படங்கள்,ஓடிடி

இதனை அடுத்து இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியான த்ரில்லர் திரைப்படம் “ரன் பேபி ரன்”. இத்திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படமும் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

அதைத்தொடர்ந்து இயக்குனர் சான் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “பொம்மை நாயகி”. இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது என்றே கூறலாம். இத்திரைப்படம் இன்று ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Tags :
|