Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கு உதவ நாகலாந்து அமைச்சர் அழைப்பு..

மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கு உதவ நாகலாந்து அமைச்சர் அழைப்பு..

By: Monisha Tue, 12 July 2022 7:23:58 PM

மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கு உதவ நாகலாந்து அமைச்சர் அழைப்பு..

உலக மக்கள் தொகை தினத்தை ஒட்டி நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நாகலாந்து அமைச்சர், மக்கள் தொகை கட்டுப்பாட்டை கொண்டுவர ’சிங்கிள்’ ஆக இருங்கள் என்றும், ’இப்போதே என்னுடன் ’சிங்கிள்ஸ்’ இயக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்’ என்றும் கூறியுள்ளது அனைவரையும் கவனிக்கவைத்துள்ளது.

நாகாலாந்தில், உலக மக்கள்தொகை தினத்தையொட்டி அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டு, குடும்பக் கட்டுப்பாடு குறித்து தகவல்களைக் கேட்டறிந்த அமைச்சர் அதற்கான தீர்வுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.மேலும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு தீர்வையும் பரிந்துரைத்தார்.

minister,population,control,family ,மக்கள் ,தொகை,தினம், குடும்பம்,

“உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, மக்கள் தொகைப் பெருக்கம் தொடர்பான பிரச்னைகளில் விழிப்புணர்வோடு இருப்போம். மற்றும் குழந்தைப் பேறு குறித்த தகவலறிந்து தீர்வுகளை புகுத்துவோம். அல்லது என்னைப் போல் தனிமையில்(சிங்கள்) இருங்கள். அனைவரும் ஒரு நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்க இன்றே ’சிங்கிள்ஸ்’ இயக்கத்தில் சேருங்கள்” என்று ட்வீட் செய்துள்ளார் 42 வயதாகும் இந்த பேச்சிலர் அமைச்சர்.


சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்ட இந்த நகைச்சுவையான கருத்துக்கு மக்கள் பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.மேலும், ’உங்களுக்கு ஒரு தனித்துவமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. தீவிரமான தலைப்புகளுடன் நகைச்சுவையின் கூறுகளை நீங்கள் கூறுவது அற்புதமாக இருக்கிறது’ என்று சமூகவலைதளவாசிகள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Tags :