Advertisement

கொச்சிக்கு பறந்த நயன்தாரா – விக்னேஷ் ஜோடி புகைப்படங்கள் வைரல்

By: Nagaraj Mon, 13 June 2022 5:02:56 PM

கொச்சிக்கு பறந்த நயன்தாரா – விக்னேஷ் ஜோடி புகைப்படங்கள் வைரல்

சென்னை: திருமணம் முடிந்து திருப்பதி சென்ற நயன்தாரா – விக்னேஷ் ஜோடி தற்போது கொச்சிக்கு சென்றுள்ளனர்.
தமிழ் சினிமாவில் புதுமண ஜோடியாக சுற்றி வருகிறார்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜுன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு பெரிய ரிசார்ட்டில் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.
திருமணத்திற்கு குறிப்பிட்ட பிரபலங்களே வந்தார்கள், திருமண நிகழ்வை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க NetFlixல் வெளியாக இருக்கிறது.

photos,viral,nayanthara,kochi,director,marriage ,
புகைப்படங்கள், வைரல், நயன்தாரா, கொச்சி, இயக்குனர், திருமணம்

திருமண வீடியோவை நயன்தாரா-விக்னேஷ் சிவன் விற்றதன் மூலம் திருமண செலவு போக ரூ. 25 கோடியை பெற்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து இருவரும் திருமணம் திருப்பதி சென்றார்கள், அடுத்து சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள். தற்போது இருவரும் கொச்சி சென்றுள்ளார்களாம். அங்கு அவர்கள் ரசிகர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது.

Tags :
|
|
|