Advertisement

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் படத்தின் மிரட்டல் ட்ரைலர்

By: Nagaraj Fri, 09 Dec 2022 4:48:36 PM

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் படத்தின் மிரட்டல் ட்ரைலர்

சென்னை: நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் ட்ரைலர் செம மிரட்டலாக வெளியாகி அனைவரையும் கவர்ந்து இழுத்துள்ளது.

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா ‘கனெக்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர்.

birthday,last year,gained attention,released,released recently, ,இயக்குனர், கனெக்ட் படம், டிரைலர், நயன்தாரா

‘கனெக்ட்’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இடைவேளை இல்லாமல் உருவான இப்படத்தின் ரன்னிங் டைம் 99 நிமிடம் ஆகும். இதையடுத்து இப்படத்தின் டிரைலர் இன்று (டிசம்பர் 9) நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :