- வீடு›
- பொழுதுபோக்கு›
- மலைக்க வைக்கும் பிரமாண்ட வெற்றியை எதிர்பார்க்கவே இல்லை
மலைக்க வைக்கும் பிரமாண்ட வெற்றியை எதிர்பார்க்கவே இல்லை
By: Nagaraj Tue, 13 Dec 2022 10:54:50 AM
சென்னை: இல்லை எதிர்பார்க்கவே இல்லை... இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று லவ் டுடே பட ஹீரோவும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் தெரிவித்தார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “லவ் டுடே” படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்போது ஓடிடி தளத்திலும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது.
இந்த படத்தில் பணிபுரிந்தவர்கள் மற்றும் மீடியாக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது: இப்படத்தின் வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான். எனினும் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. பர்ஸ்ட்லுக் வெளியானதிலிருந்தே எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது.
எதிர் காலத்திலும் மக்கள் ஆதரிக்கக்கூடிய திரைப்படங்களை உருவாக்க முயற்சிப்பேன். இத்திரைப்படத்தின் முதுகெலும்பாக இருந்ததற்கு ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்று அவர் பேசினார்..