Advertisement

சூர்யா நடிக்கவிருக்கும் வெப்தொடர் குறித்த புதிய தகவல்கள்!!

By: Monisha Tue, 14 July 2020 11:23:21 AM

சூர்யா நடிக்கவிருக்கும் வெப்தொடர் குறித்த புதிய தகவல்கள்!!

சூர்யா நடித்த முடித்துள்ள 'சூரரைப்போற்று' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் இந்த திரைப்படம் வெளியாகும். மேலும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் 'அருவா' என்ற திரைப்படத்திலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' என்ற திரைப்படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் வெப்தொடர் ஒன்றில் சூர்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்த தொடரில் நடிக்கவிருக்கும் சூர்யாவின் சம்பளம் முழுவதையும் அனாதை இல்லங்களுக்கு நிதியாக கொடுக்க சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சூர்யா நடிக்கவிருக்கும் வெப்தொடர் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

surya,web series,updates,episode,director ,சூர்யா,வெப்தொடர்,அப்டேட்,எபிசோடு,இயக்குனர்

சூர்யா நடிக்கவிருக்கும் வெப்தொடரின் டைட்டில் 'நவரசா' என்று வைக்கப்பட்டுள்ளது. ஒன்பது எபிசோடுகளை கொண்ட இந்த தொடரை 9 இயக்குனர்கள் இயக்க உள்ளனர். அதில் ஒரு எபிசோடை மணிரத்தினம் இயக்கவுள்ளார். நடிகர்கள் சித்தார்த் மற்றும் அரவிந்த்சாமி ஆகியோர்களும் இந்த தொடரின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளனர்.

இந்த நிலையில் சூர்யாவின் பகுதியை இயக்கவிருப்பது ஜெயேந்திர பஞ்சாபிகேஷன் என்ற தகவல் கிடைத்துள்ளது. இவர் ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு சித்தார்த், பிரியா ஆனந்த், நித்யா மேனன் நடித்த '180' என்ற திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.

Tags :
|