Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • தற்போதைக்கு திருமணம் பற்றிய திட்டம் இல்லையாம்; நடிகை கீர்த்தி சுரேஷ் முடிவு

தற்போதைக்கு திருமணம் பற்றிய திட்டம் இல்லையாம்; நடிகை கீர்த்தி சுரேஷ் முடிவு

By: Nagaraj Wed, 30 Dec 2020 8:15:03 PM

தற்போதைக்கு திருமணம் பற்றிய திட்டம் இல்லையாம்; நடிகை கீர்த்தி சுரேஷ் முடிவு

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திருமணம் பற்றிய திட்டங்களை தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்கள் எல்லாம் மார்க்கெட் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டும் என்பது அவர்களது பெற்றோரின் விருப்பமாக இருந்து வருகிறது.

ஆனால் சில நடிகைகள் அதை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனென்றால், திருமணத்திற்குப் பிறகு நடிகைகள் பலர் தங்களது கேரியரில் இருந்து விலகும் நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் தற்போதெல்லாம் நடிகைகள் 35 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அந்தவகையில் தமன்னா, அனுஷ்கா, திரிஷா போன்றோர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் திரைத்துறையில் மின்னிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தனது திருமணம் பற்றிய திட்டங்களை தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

keerthi suresh,fans,pawan kalyan,a few years ,கீர்த்தி சுரேஷ், ரசிகர்கள, பவன் கல்யாண், சில ஆண்டுகள்

அதாவது தென்னிந்தியாவில் குறுகிய காலத்திலேயே தனது திறமையால் முன்னேறி, முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் இந்த ஆண்டு 'பென்குயின்', 'மிஸ் இந்தியா' ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன.

மேலும் தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ்க்கு 28 வயது ஆகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதனால் இவருடைய பெற்றோர்கள் கீர்த்தி 30 வயதை அடைவதற்குள் திருமணமாகி செட்டில் ஆகவேண்டும் என்று நினைக்கிறார்களாம்.

ஆனால் கீர்த்தி சுரேஷ் தனக்கு வேறு திட்டங்கள் இருப்பதாகவும், தனது நடிப்பு வாழ்க்கையை இன்னும் சில ஆண்டுகள் தொடர விரும்புவதாகவும் அவருடைய பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளாராம்.
தற்போது கீர்த்தி சுரேஷின் கைவசம் மகேஷ்பாபுவின் 'சர்க்காரு வாரி பாட்டா' என்ற திரைப்படமும், பவன் கல்யாணின் நடிப்பில் தயாராகும் ஒரு படமும் இருக்கின்றனவாம். எனவே, கீர்த்தி சுரேஷின் இந்த முடிவை கேட்ட அவரது ரசிகர்கள், அவரை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனராம்.

Tags :
|