Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பதான் ரூ 600 கோடி வசூலுடன் ஆல் டைம் டாப் 10 இந்திய வசூல் படங்கள் பட்டியலில் நுழைந்துள்ளது

பதான் ரூ 600 கோடி வசூலுடன் ஆல் டைம் டாப் 10 இந்திய வசூல் படங்கள் பட்டியலில் நுழைந்துள்ளது

By: vaithegi Tue, 31 Jan 2023 1:53:59 PM

பதான் ரூ 600 கோடி வசூலுடன் ஆல் டைம் டாப் 10 இந்திய வசூல் படங்கள் பட்டியலில் நுழைந்துள்ளது

ஆல் டைம் டாப் 10 இந்திய வசூல் படங்கள் பட்டியலில்-பதான் ... இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் கடந்த 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் பதான் படம் வெளியான நான்கு நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.402 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

india collection,pathan ,இந்திய வசூல்,பதான்


பதான் உலகம் முழுவதும் 5 நாட்களில் 500 கோடிக்குமேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஜனவரி 25-ம் தேதி வெளியான பதான் திரைப்படம் 5 நாட்களில் ரூ.542 கோடி வசூலித்துள்ளது. இப்டம் ஏற்கனவே இந்தி பாக்ஸ் ஆபிஸில் பெரும்பாலான தொடக்க வார இறுதி சாதனைகளை முறியடித்துள்ளது மற்றும் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த இந்தி படங்களில் ஒன்றாகும்.

எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த டாப்-10 இந்தி படங்களில் நுழைந்துள்ளது. கேஜிஎப் அத்தியாயம் 2 மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற படங்களைத் தொடர்ந்து இப்படம் இப்போது அதிக வசூல் செய்த 3-வது இந்தியத் திரைப்படமாகும். இது விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் வசூலை முந்தியுள்ளது.

மேலும் திரைப்பட வர்த்தக ஆய்வாளரான ரமேஷ் பாலாவின் கூற்றுப்படி, உலகளவில் பதான் ரூ 600 கோடி வசூலித்துள்ளது. அவர் டுவிட்டரில், பதான் ரூ 600 கோடி வசூலுடன் ஆல் டைம் டாப் 10 இந்திய வசூல் படங்கள் பட்டியலில் நுழைந்துள்ளது என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :