- வீடு›
- பொழுதுபோக்கு›
- வரிசைக்கட்டி நிற்கும் பொங்கல் படங்கள்... ரஜினி படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
வரிசைக்கட்டி நிற்கும் பொங்கல் படங்கள்... ரஜினி படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
By: Nagaraj Fri, 17 Nov 2023 10:12:51 PM
சென்னை: பொங்கலுக்கு விருந்தாக போட்டி போட்டுக் கொண்டு முக்கிய நடிகர்களின் படங்கள் களம் இறங்குகிறது. இதனால் ரசிகர்களுக்கு தான் செம கொண்டாட்டம்.
தமிழ் சினிமாவை பொறுத்த வரை பண்டிகை நாட்கள் யாருக்கு சந்தோஷோ, இல்லையோ சினிமா ரசிகர்களுக்கு தான் கொண்டாட்டம். தங்கள் பேவரட் நடிகர்களின் படங்கள் பண்டிகை தினங்களில் தான் வரும், அன்றைய தினம் வீட்டிலிருப்பதை விட திரையரங்க வாசலில் இருப்பதை தான் இன்றைய இளைஞர்கள் கூட்டமும் விரும்புகிறது.
இந்நிலையில் வரும் 2024 பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் மட்டுமே 4 முக்கிய படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றது. இதில் என்ன தான் கெஸ்ட் ரோல் என்றாலும் ரஜினியின் லால் சலாம் முக்கிய படமாக பார்க்கப்படுகின்றது.
இதை தொடர்ந்து பல கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்கள் இருக்க, கண்டிப்பாக இந்த பொங்கலுக்கு தியேட்டர் கிடைப்பது என்பது சாதரணமில்லை.
அதோடு குடும்பங்கள் கொண்டாடும் அரண்மனை 4 வேறு வருவதால் பொங்கல் விடுமுறை எக்ஸ்ட்ரா 5 நாள் விட்டாலும் ரசிகர்களுக்கு போதாது தான் போல.