- வீடு›
- பொழுதுபோக்கு›
- பல ஆண்டுகளுக்கு பின் கமலுடன் இணைந்து நடிக்க உள்ள பிரபுதேவா
பல ஆண்டுகளுக்கு பின் கமலுடன் இணைந்து நடிக்க உள்ள பிரபுதேவா
By: Nagaraj Thu, 31 Dec 2020 1:53:24 PM
பல ஆண்டுகளுக்கு பின்னர் கமலுடன் இணைந்து நடிகர் பிரபுதேவா நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தினை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகின்ற திரைப்படம் கமல்ஹாசன் நடிக்கவுள்ள விக்ரம். இந்த படம் நடிகர் கமல்ஹாசனுக்கு 232வது திரைப்படம் ஆகும். இதற்கு விக்ரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த விக்ரம் படத்திற்கான போஸ்டர் மற்றும் முன்னோட்ட வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகுந்த வைரலானது. இந்த விக்ரம் படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற 2021 ஜனவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்பொழுது விக்ரம் படத்தில் நடிகர் கமலுடன், இயக்குனரும், நடிகருமான
பிரபுதேவா இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 1998ல் வெளியான காதலா
காதலா எனும் படத்தில் பிரபுதேவாவும், நடிகர் கமலும், இணைந்து
நடித்திருந்தனர்.
அந்தப் படம் இவர்களுக்கு மிக பெரிய ஹிட்டான படமாக
அமைந்தது. இத்தகைய சூழலில், சுமார் 22 வருடங்களுக்கு பின்னர் தற்போது
கமலுடன் பிரபுதேவா நடிக்கிறார். பிரபுதேவாவுக்கு இந்த படத்தில் அதிமுக்கிய
கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.