Advertisement

துப்பாக்கி தலைப்பை விஜய்க்கு தர மறுத்த தயாரிப்பாளர் தாணு

By: Nagaraj Sun, 23 Aug 2020 10:36:05 AM

துப்பாக்கி தலைப்பை விஜய்க்கு தர மறுத்த தயாரிப்பாளர் தாணு

விஜய்க்கு "துப்பாக்கி" தலைப்பை தர மறுத்து விட்டாராம் தயாரிப்பாளர் தாணு என்று தகவல்கள் உலா வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய். பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முன்னணி வெற்றி தயாரிப்பாளராக திகழ்ந்து வருபவர் கலைப்புலி எஸ். தாணு. இவர் தளபதி விஜய்யை வைத்து தயாரித்த ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியிட்ட படம் துப்பாக்கி.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரு. 100 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்த படம். பிறகு அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான "தெறி" படத்தை எஸ். தாணு தயாரித்தார்.

vijay,thanu,cracks,title,kollywood,gun ,விஜய், தாணு, விரிசல், தலைப்பு, கோலிவுட், துப்பாக்கி

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் 4-ஆம் முறையாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. துப்பாக்கி 2 வாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கலைப்புலி எஸ். தாணு துப்பாக்கி படத்தின் தலைப்பை விஜய்க்கு தரமறுத்து விட்டாராம்.

இதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால், தளபதி65- யில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்தார். ஆனால், அதற்கிடையில் சூர்யாவின் "வாடிவாசல்" படத்தை இயக்கி முடித்த பிறகு வெற்றிமாறன் உங்கள் படத்தை இயக்குவார் என விஜய்யிடம் தாணு கூறிவிட்டாராம்.

விஜய்க்கும், தாணுவிற்கும் இருந்த நட்பில் விரிசல் ஏற்பட்டது என்றும், அந்த விரிசல் காரணமாக தான் துப்பாக்கி படத்தின் தலைப்பை தாணு, விஜய்க்கு தரமறுத்து விட்டார் என்றும் தகவல்கள் தற்போது கோலிவுட் வட்டாரங்கள் அதிர்ச்சியில் உள்ளன.

Tags :
|
|
|
|