- வீடு›
- பொழுதுபோக்கு›
- பிக்பாஸ் போட்டியாளர் ஜனனிக்கு கிடைக்கும் வரவேற்பு
பிக்பாஸ் போட்டியாளர் ஜனனிக்கு கிடைக்கும் வரவேற்பு
By: Nagaraj Thu, 03 Nov 2022 11:56:09 PM
சென்னை: பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. இதில் போட்டியாளராக பங்கேற்றுள்ள ஜனனிக்கு பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
எல்லா சீசன்களை போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக அசல் கோளாறு இந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் படியான டாஸ்க் நடைபெற்று வருகிறது.
அதில் ஜனனி பாடல் ஒன்று நடனமாடி இருக்கிறார், ஆனால் தற்போது அவர்
வெளிபடுத்திய நடனம் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களை
கவர்ந்திருக்கிறது.
ஜனனியின் அந்த நடன வீடியோவை கண்ட ரசிகர் ஒருவர் ஜனனி இந்த வருட பிக்பாஸின் கண்டுப்பிடிப்பாக இருக்க போகிறார் என சொல்லியுள்ளார்.ஏற்கனவே இதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பெரிய திரையில் பிரபலங்களாக கலக்கி வருபவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.