- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஜுராசிக் பார்க் படத்தின் படப்பிடிப்பு குழுவினரின் பாதுகாப்புக்காக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
ஜுராசிக் பார்க் படத்தின் படப்பிடிப்பு குழுவினரின் பாதுகாப்புக்காக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
By: Monisha Mon, 22 June 2020 11:38:06 AM
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான நாடுகளில் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதிக உயிரிழப்புகளை சந்தித்த அமெரிக்காவில் இப்போது இறப்பு சதவீதம் குறைந்து வருகிறது.
அதைத்தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படப்பிடிப்புகளை தொடர்வதற்கு படக்குழுவினர் முடிவு செய்து இருக்கிறார்கள். சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய ‘ஜுராசிக் பார்க்‘ படத்தின் 6-ம் பாக படப்பிடிப்பு கடந்த 3 மாதங்களுக்கு முன்பே தொடங்க இருந்தது. கொரோனா காரணமாக இந்த படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டது.
இப்போது அந்த படப்பிடிப்பை அடுத்த மாதம் 6-ந் தேதி தொடங்குவது என்று தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து, ‘அவதார் 2,’ ‘ஜுராசிக் வேல்ட் டொமினியன்’ ஆகிய படப்பிடிப்புகளும் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.
படப்பிடிப்பு குழுவினரின் பாதுகாப்புக்காக மட்டும் ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது.