Advertisement

உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் வேட்டை நடத்திய வாரிசு படம்

By: Nagaraj Mon, 06 Feb 2023 11:29:51 PM

உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் வேட்டை நடத்திய வாரிசு படம்

சென்னை: வாரிசு படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பு, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கடந்த 11ஆம் தேதி திரையரங்குகளில் பெரும் ஆரவாரத்துடன் வெளியானது. இதையடுத்து தெலுங்கில் வெளியான ‘வாரிசுடு’ திரைப்படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

chennai,varisu,vijay, ,சென்னை, வாரிசு, விஜய், ரசிகர்கள், போஸ்டர், வைரல்

போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர், ‘வாரிசு’ படம் வெளியான ஏழு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் வாரிசு படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Tags :
|
|