Advertisement

வாரிசு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியதாக சன் டிவி

By: Nagaraj Wed, 14 Sept 2022 11:33:34 PM

வாரிசு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியதாக சன் டிவி

சென்னை: வாரிசு படத்தின் டிஜிட்டல் உரிமையை 60வது கோடிக்கு அமேசான் பிரைம் வீடியோ நிறுவனமும் சாட்டிலைட் உரிமையை 50 கோடிக்கு சன் டிவியும், படத்தின் ஆடியோ உரிமையை 10 கோடிக்கு டி சீரிஸ் நிறுவனமும் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜயின் 67-வது படம்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தால் உருவாக உள்ளது. இவர்களது கூட்டணியில் வெளியான 'மாஸ்டர்' படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் குறித்த செய்திகளும், அவரது படம் தொடர்பான சிறு செய்திகளும் பெரிய அளவில் பேசுபொருளாகி வருகிறது. அப்படி இருக்க விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

varisu film,vijay,suntv,rs.50 crore,prime video ,வாரிசு படம், விஜய், சன்டிவி, ரூ.50 கோடி, பிரைம் வீடியோ

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு கட்டங்களாக நடக்கும் எனவும் படதின் மொத்த காட்சிகளையும் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தீபாவளி பண்டிகை அன்றும் படத்தின் டீசர் ஆங்கில புத்தாண்டு அன்றும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜயின் 67-வது படம்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தால் உருவாக உள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்த படத்திற்குப் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைய உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் விஜயின் வாரிசு படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்,சாட்டிலைட் ரைட்ஸ், மற்றும் ஆடியோ ரைட்ஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை 60வது கோடிக்கு அமேசான் பிரைம் வீடியோ நிறுவனமும் சாட்டிலைட் உரிமையை 50 கோடிக்கு சன் டிவியும், படத்தின் ஆடியோ உரிமையை 10 கோடிக்கு டி சீரிஸ் நிறுவனமும் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags :
|
|