Advertisement

சூர்யாவின் 24 படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது!

By: Monisha Tue, 11 Aug 2020 5:41:53 PM

சூர்யாவின் 24 படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது!

தெலுங்கில் மனம் என்ற வெற்றிப் படத்தை இயக்கிய விக்ரம் குமார், தமிழில் சூர்யாவின் 24 படத்தை இயக்கினார். கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருந்தார்கள்.

சூர்யாவின் 2டி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு என இரண்டு தேசிய விருதுகள் வழங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், மக்கள் பொழுதுபோக்குக்காக ஓடிடி தளங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதில் புது படங்கள் மட்டுமின்றி, பழைய படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

surya,24 film,ott,director vikram kumar,technical issue ,சூர்யா,24 படம்,ஓடிடி,இயக்குனர் விக்ரம் குமார்,தொழில்நுட்ப பிரச்சினை

அந்த வகையில் சூர்யாவின் 24 படத்தை ஓடிடியில் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. ஆனால், வெளியிடப்பட்டதில் இருந்தே படத்தை தேடிப் பார்ப்பதில் சிக்கல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் அப்படத்தின் ஆடியோ குவாலிட்டி சரியாக இல்லை என்றும் பயனர்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து 24 படத்தை ஓடிடி தளத்தில் இருந்து நீக்கி உள்ளனர். தொழில்நுட்ப பிரச்சினைகள் அனைத்தும் சரிசெய்துவிட்டு படத்தை மீண்டும் ஓடிடியில் பதிவேற்றம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|