Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஒரு சூப்பர் ஹீரோவுடன் நடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது; லட்சுமி மஞ்சு தந்தை குறித்து சூர்யா

ஒரு சூப்பர் ஹீரோவுடன் நடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது; லட்சுமி மஞ்சு தந்தை குறித்து சூர்யா

By: Monisha Sun, 15 Nov 2020 6:31:51 PM

ஒரு சூப்பர் ஹீரோவுடன் நடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது; லட்சுமி மஞ்சு தந்தை குறித்து சூர்யா

சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் உள்பட நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு அனைத்து மாநிலங்களிலிருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதை அடுத்து இந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ஒன்று மோகன்பாபு நடித்திருந்தார். இந்நிலையில், மோகன்பாபு மகள் லட்சுமி மஞ்சு தனது டுவிட்டர் பக்கத்தில் ’சூரரைப்போற்று’ படத்திற்கு வாழ்த்தினை கூறியுள்ளார். இந்த படத்தை பார்த்த பிறகு சூர்யாவின் மீதான அன்பு மற்றும் மரியாதை எனக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது என்றும், நீங்கள் உங்களுடைய திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

superhero,mohanbabu,surya,praising surya,lakshmi manchu ,சூப்பர் ஹீரோ,மோகன்பாபு,சூர்யா,சூரரைப் போற்று,லட்சுமி மஞ்சு

மேலும், இந்த படத்தை பார்த்த பின்னர் சுதா கொங்கரா மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டுள்ளது. என் தந்தை இந்த படத்தில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளார் என்றும் உங்கள் இருவரையும் ஒரே படத்தில் பார்த்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.

லட்சுமி மஞ்சுவின் இந்தக் டுவீட்டிற்கு பதிலளித்த சூர்யா 'சூரரை போற்று' படப்பிடிப்பின்போது உங்கள் தந்தையுடன் நடித்தது ஒரு சூப்பர் ஹீரோவுடன் நடித்தது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. தெலுங்கு திரையுலக ரசிகர்களிடம் இருந்து கிடைத்துள்ள மிகப் பெரிய அன்பு என்னை நெகிழ வைத்து உள்ளது என்றும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|