Advertisement

தளபதி 65 படத்தின் நாயகியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை?

By: Monisha Fri, 28 Aug 2020 11:07:09 AM

தளபதி 65 படத்தின் நாயகியாக நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள திரைப்படம் தளபதி 65. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கொரோனா வைரஸ் லாக்டவுன் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வுகளை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார். ஏற்கனவே இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும் தமன் இசை அமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தளபதி 65 படத்தின் நாயகியாக நடிக்க பாகுபலி நடிகை தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

thalapathy 65,tamanna,vijay,ar murugadoss,sun pictures ,தளபதி 65,தமன்னா,விஜய்,ஏஆர் முருகதாஸ்,சன் பிக்சர்ஸ் நிறுவனம்

விஜய் மற்றும் தமன்னா இணைந்து ஏற்கனவே சுறா என்ற படத்தில் நடித்தனர். இந்த படம் விஜய்யின் ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விஜய்-தமன்னா கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. அந்த படத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் நடனமாடி இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே மீண்டும் இந்த ஜோடியை திரையில் காண ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|