- வீடு›
- பொழுதுபோக்கு›
- தந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு நிக்கி கல்ராணியை மட்டும் அழைத்த தமிழ் நடிகர்!
தந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு நிக்கி கல்ராணியை மட்டும் அழைத்த தமிழ் நடிகர்!
By: Monisha Sat, 18 July 2020 11:02:52 AM
தந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு குடும்ப உறுப்பினர்களைத் தவிர நிக்கி கல்ராணிக்கு மட்டும் அழைப்பு விடுத்த தமிழ் நடிகர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் ஆதியின் தந்தை பிறந்த நாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு ஊரடங்கு காரணமாக குடும்ப உறுப்பினர்கள் தவிர நடிகர் ஆதி யாரையும் அழைக்கவில்லை. ஆனால் நடிகை நிக்கி கல்யாணிக்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளார். ஆதி குடும்பத்தினரோடு ஆதியின் தந்தை பிறந்த நாள் நிகழ்ச்சியில் நிக்கி கல்ராணி பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஆதி, நிக்கி கல்ராணி இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களது திருமண அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
நடிகை நிக்கி கல்யாணி ஜிவி பிரகாஷ் நடித்த 'டார்லிங்' என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமாகி அதன் பின் வேலை வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, நெருப்புடா, ஹர ஹர மகாதேவகி, கலகலப்பு 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
அதேபோல் 'ஈரம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் ஆதி, அய்யனார், ஆடுபுலி ஆட்டம், அரவான், யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆதி மற்றும் நிக்கி கல்யாணி ஆகிய இருவரும் இணைந்து யாகாவாராயினும் நாகாக்க, மரகதநாணயம் ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.