- வீடு›
- பொழுதுபோக்கு›
- தளபதி 68 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பது ஏறத்தாழ உறுதியானது
தளபதி 68 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பது ஏறத்தாழ உறுதியானது
By: Nagaraj Tue, 25 Apr 2023 7:54:33 PM
சென்னை: தளபதி 68 படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து லியோ படத்தில் நடித்துள்ளனர். சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதனையடுத்து விஜய்யின் 68வது படம் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரவிவருகின்றன. இவரது 68வது படத்தை அட்லி இயக்கப்போகிறார் என்றும் தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்கப்போகிறார் என்றும் கூறப்படுகிறது.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகனும், நடிகருமான ஜிதன் ரமேஷ் சமீபத்தில் பேட்டியளித்தார். அதில் லியோ படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் படத்தை நம்ம சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கான கதையை தற்போது கேட்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட ஜீவாவிடம் பத்திரிகையாளர் ஒருவர் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிப்பாரா என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஜீவா, ”நிச்சயம் நடிப்பாரு. ஒரு வாரத்துக்கு முன்னதாக நடிகர் விஜய்யை இது தொடர்பாக மீட் பண்ணாங்க. அப்போ விஜய் சாரே நான் படம் பண்றேனு சொல்லியிருக்காரு.
நானும் அதுல நடிக்கிறதுக்காக எங்க அப்பாவ இப்போவே கேட்டுட்டு இருக்கேன். 100வது படத்துல மேக்ஸிமம் விஜய் சார் தான் நடிப்பாரு” என்றார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா போன்ற படங்களின் மாபெரும் வெற்றியால் தளபதி 68 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.