- வீடு›
- பொழுதுபோக்கு›
- உதவியாளர்களுக்கு தங்க காசு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை
உதவியாளர்களுக்கு தங்க காசு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை
By: Nagaraj Wed, 21 June 2023 8:50:58 PM
சென்னை: உதவியாளர்களுக்கு தங்க காசு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் விஷாலின் அண்ணியும், நடிகையுமான ஸ்ரேயா ரெட்டி.
விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் வில்லியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரேயா ரெட்டி.
தற்போது ஸ்ரேயா ரெட்டி பிரபாஸ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் ஸ்ரேயா ரெட்டி இப்படத்தில் தன்னுடன் பணிபுரிந்த உதவியாளர்களுக்கு தங்கக் காசை பரிசாக கொடுத்துள்ளாராம். இவர் கடந்த 2008 -ம் ஆண்டு விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Tags :
helpers |
gold |
prize |