Advertisement

சூர்யா பிறந்த நாளை ஒட்டி படக்குழு எடுத்துள்ள முக்கிய முடிவு

By: Nagaraj Fri, 08 July 2022 4:18:12 PM

சூர்யா பிறந்த நாளை ஒட்டி படக்குழு எடுத்துள்ள முக்கிய முடிவு

சென்னை: வரும் 23ம் தேதி 23ம் தேதி சூர்யாவிற்கு பிறந்தநாள் என்பதால் அந்த தினத்தில் 'வாடிவாசல்' படத்தின் டெஸ்ட் ஷூட் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபகாலமாக வெளியாகி கொண்டிருக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பாராட்டை பெற்று வருகிறது. இந்நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் முதன்முறையாக சூர்யா இணைந்து பணியாற்ற இருக்கிறார்.

புகழ்பெற்ற தமிழ் நாவலில் உள்ள ஏறுதழுவலை மையமாக வைத்து உருவாக்கப்பட இருக்கும் இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும் அதிகம் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படமாக இப்படம் மாறிவிட்டது.

vadivasal,actor surya,birthday,bull,video,film crew ,வாடிவாசல், நடிகர் சூர்யா, பிறந்தநாள், காளை, வீடியோ, படக்குழு

சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் பணியை படக்குழு மேற்கொண்டது, அந்த தளத்தில் சூர்யா இடம்பெற்றிருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலானது. தற்போது வெளியாகி இருக்கும் செய்திகளின்படி, இந்த மாதம் 23ம் தேதி சூர்யாவிற்கு பிறந்தநாள் என்பதால் அந்த தினத்தில் 'வாடிவாசல்' படத்தின் டெஸ்ட் ஷூட் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

படக்குழு வெளியிடும் கிளிம்ப்ஸ் வீடியோவில் டெஸ்ட் ஷூட்டில் உள்ள உண்மையான மற்றும் பிடிஎஸ் காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெள்ளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 'வாடிவாசல்' படத்தில் ஒரு காளையும் நடிக்கவுள்ளது, தற்போது அந்த காளையை நடிகர் சூர்யா கவனித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

Tags :
|
|