Advertisement

படத்தின் வெற்றிக்காக இயக்குனருக்கு பரிசு வழங்கிய தயாரிப்பாளர்

By: Nagaraj Sat, 24 Sept 2022 9:48:19 PM

படத்தின் வெற்றிக்காக இயக்குனருக்கு பரிசு வழங்கிய தயாரிப்பாளர்

சென்னை: புல்லட் பைக் பரிசாக வழங்கினார்... சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படம் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகியுள்ளது.

பலதரப்பட்ட மக்களிடம் இருந்தும் பாசிடிவ் ரிவ்யூக்களை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியுள்ளது என கூறலாம். வேல்ஸ் இன்டர்நேஷனல் உரிமையாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இவர் எல் கே ஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன் போன்ற பல்வேறு வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.


ஏற்கனவே கௌதம் வாசுதேவனின் இயக்கத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை இவர்தான் தயாரித்திருந்தார். இப்போது இவர் தயாரித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூல் அள்ளிக் கொடுத்திருக்கிறது.

bike,parisalipu,director,producer,simbu movie ,பைக், பரிசளிப்பு, இயக்குனர், தயாரிப்பாளர், சிம்பு படம்

மேலும் 30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரிலீஸ் ஆன 10 நாட்களுக்குள் 50 கோடி வசூலை தாண்டி விட்டது. இதனால் படக்குழு பயங்கர உற்சாகத்தில் இருக்கின்றார்கள். இந்த படத்தின் சக்சஸ் மீட் கூட சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. அப்போது பேசிய ஐசரி கணேஷ் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் வரும் எனவும் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இரண்டாம் பாகம் பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆகும் என தெரிவித்துள்ளார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்ததை கொண்டாடும் விதமாக ஐசரி கணேஷ் இயக்குனர் கௌதம் மேனனுக்கு புல்லட் பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இந்த பைக்கின் மதிப்பு இரண்டு லட்சம் இருக்கும் என கூறுகின்றார்கள். தற்போது இந்த புகைப்படம் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags :
|