Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வாரிசு மூன்றாவது போஸ்டர் வெளியானது... ஸ்டைல் விஜய்யை பார்த்து ரசிகர்கள் உற்சாகம்

வாரிசு மூன்றாவது போஸ்டர் வெளியானது... ஸ்டைல் விஜய்யை பார்த்து ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Fri, 24 June 2022 09:42:43 AM

வாரிசு மூன்றாவது போஸ்டர் வெளியானது... ஸ்டைல் விஜய்யை பார்த்து ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: விஜய் படத்தின் போஸ்டர்... நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் 3வது போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ரசிகர்கள் இதனால் செம உற்சாகத்தில் உள்ளனர்.

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்த நிலையில் அவர் அடுத்ததாக நடிக்கும் தளபதி 66 படத்தை ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 21 இந்தப் படத்துக்கு வாரிசு என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு போஸ்டரும் வெளியானது.

vijay,heir,third poster,family story,expectation ,விஜய், வாரிசு, மூன்றாம் போஸ்டர், குடும்பக்கதை, எதிர்பார்ப்பு

போஸ்டர் மற்றும் தலைப்பு ரசிகர்களைக் கவரவில்லை என்பதை ரசிகர்களின் சமூக வலைதள பதிவுகள் காட்டின. ஆனால் 22ம் தேதி வெளியான இரண்டாவது போஸ்டருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. இந்நிலையில் 3வது போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஜய் பைக்கின் மேல் ஸ்டைலாக அமர்ந்திருக்கிறார்.


வாரிசு என்ற தலைப்பை வைத்தே படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் தங்களது கணிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த வாரிசான விஜய், தனது குடும்பத்துக்கு வரும் சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எப்படி இருந்தாலும் பீஸ்ட் படத்தின் தோல்வியை இந்த படம் நிவர்த்தி செய்து விடும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. வெகு ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பக்கதையில் விஜய் நடிப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Tags :
|
|