- வீடு›
- பொழுதுபோக்கு›
- கிக் படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியி செம வரவேற்பு
கிக் படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியி செம வரவேற்பு
By: Nagaraj Tue, 24 Jan 2023 10:54:24 AM
சென்னை: சந்தானத்தின் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்பட்ட கிக் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றுள்ளது.
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிக்' படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
கிக் பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பாடல்கள் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. கிக் இந்நிலையில் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'கிக்' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் இணையத்தில் பலரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் டிரைலருக்கு செம வரவேற்பு கிடைத்து வருகிறது.