Advertisement

பிக் பாஸ் 7 -ன் வைல்டு கார்டு கண்டஸ்டன்ட் இவர்களாம்

By: vaithegi Fri, 27 Oct 2023 10:55:18 AM

பிக் பாஸ் 7 -ன் வைல்டு கார்டு கண்டஸ்டன்ட் இவர்களாம்

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைகள் மற்றும் எதாவது மக்களை கவர வைக்கும் வகையில் இருக்கும். ஆனால், தற்போது ஒளிபரப்பாகி வரும் 7-வது சீசன் பெரிதாக ரசிகர்களை ஈர்க்காமல் இருக்கிறது என்றே கூறலாம். அடிக்கடி வீட்டிற்குள் சண்டைகள் வந்தாலும் கூட வழக்கமாக இல்லாத சீசன் போல பெரிய அளவில் சண்டைகள் எதுவும் வராமல் சின்ன சின்ன சண்டைகள் வந்து அந்த நேரத்திலேயே முடிந்து விடுகிறது.

மேலும் அந்த அளவிற்கு இந்த சீசன் 2 வீடுகளாக பிரித்து 2 வீடுகளிலும் மிகவும் அற்புதமாக பார்ப்பதற்கு பிரம்மாண்டமாகவும் விஜய் தொலைக்காட்சி அமைத்துக் கொடுத்து உள்ளனர். இருந்தாலும் பெரிய அளவில் இச்சீசன் மக்களை ஈர்க்கவில்லை. இந்நிலையில் வழக்கம்போன்று வாரம் வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் நாமினேஷன் நடைபெற்ற எலிமினேஷன் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இதுவரை 3 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கும் நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற உள்ளார். அதுமட்டும் இன்றி 29-ஆம் தேதி நடைபெற உள்ள எபிசோடில் வைல்ட்கார்ட் என்ட்ரி மூலம் 5 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இணையவுள்ளார்கள். வழக்கமாக வைல்ட் கார்ட் ஏனென்றால் 1 அல்லது 2 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் .

constant,bigg boss 7 ,கண்டஸ்டன்ட் ,பிக் பாஸ் 7

ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் 5 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார்கள். இதனை கமல்ஹாசனே ப்ரோமோ ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போகும் அந்த 5 போட்டியாளர்கள் பற்றிய விவரம் தற்போது கசிந்து உள்ளது.

எனவே அதன்படி, சத்யா, விஜே அர்ச்சனா, கானா பாலா, மாகாபா ஆனந்த், பப்லு பிரித்விராஜ், உள்ளிட்ட பிரபலங்கள் இந்த 7-வது சீசன் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உண்மையில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்ற விவரம் வருகிற 29-ஆம் தேதி தான் தெரிய வரும்.

Tags :