- வீடு›
- பொழுதுபோக்கு›
- சந்தன கடத்தல் வீரப்பன் குறித்த புதிய ஆவணப்படத்தின் டிரைலர் வெளியீடு
சந்தன கடத்தல் வீரப்பன் குறித்த புதிய ஆவணப்படத்தின் டிரைலர் வெளியீடு
By: Nagaraj Fri, 24 Nov 2023 09:49:18 AM
சென்னை: புதிய ஆவணப்படம்... சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த வெளியான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் வரிசையில் ‘கூஸ் முனிசாமி வீரப்பன்’ என்கிற புதிய ஆவணப்படம் உருவாகியுள்ளது.
வீரப்பன் உயிருடன் இருந்த காலத்தில் அவரைச் சந்தித்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மற்றும் அவரது குழுவின் மேற்பார்வையில் இத்தொடர் உருவாகியுள்ளது.
ஆர்.வி.பிரபாவதி தயாரிப்பில் சரத் ஜோதி இயக்கத்தில் உருவான இந்த ஆவணப்படம் வருகிற டிச.8 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இதன் டிரைலரைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன், வீரப்பனை பிடிப்பதற்காக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை தொடர்பாக ‘தி ஹண்ட் ஃபார் வீரப்பன் (The Hunt For Veerappan)’ ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.