Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிக்பாஸ் வீட்டில் ரியோவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அவரது மனைவியின் வீடியோ

பிக்பாஸ் வீட்டில் ரியோவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அவரது மனைவியின் வீடியோ

By: Nagaraj Thu, 19 Nov 2020 3:50:32 PM

பிக்பாஸ் வீட்டில் ரியோவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அவரது மனைவியின் வீடியோ

ரியோவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அவரது மனைவி... பிக்பாஸ் வீட்டில் ரியோவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காதல் மனைவி ஸ்ருதி மற்றும் குழந்தையால் ஆனந்த கண்ணீர் விட்டு கலங்கிவிட்டார் ரியோ.

பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியாளர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்கள். அதுவும் ரியோ, ஆரி, அர்ச்சனா ஆகிய சில போட்டியாளர்களுக்கு குழந்தைகளும் உள்ளது.

rio,wife,video,bliss,gazing ,ரியோ, மனைவி, வீடியோ, ஆனந்தம், கண்கலங்கினார்

அந்த பிரிவு எவ்வளவு கொடுமையானது என்பது நாம் அறிவது தான், ஆனால் நம்மை விட அவர்களுக்கு அந்த பிரிவு மிக வேதனையாக இருக்கும். இந்நிலையில் ரியோவுக்காக ஸ்ருதி சர்ப்ரைஸாக பேசி தனது குழந்தையுடன் வீடியோ ஒன்றை பிக்பாஸ் வீட்டில் நேற்று ஒளிப்பரப்பினார்கள்.

இந்த வீடியோவை பார்த்து ஆனந்தத்தில் கண் கலங்கினார் ரியோ. அதில் நீ சந்தோஷமாக இருப்பதை பார்க்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, எப்பொழுதும் மகிழ்ச்சியாக இரு. பாசிட்டிவாக இரு. லவ் யூ மிஸ் யூ. மற்ற போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags :
|
|
|
|