Advertisement

விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகும் பிகில்!

By: Monisha Thu, 18 June 2020 12:45:33 PM

விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகும் பிகில்!

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் விஜய் பிறந்தநாளின் போது திரையரங்குகளில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்படும் என்பதும், அதனை விஜய் ரசிகர்கள் பார்த்து வழக்கம். ஆனால் இந்த ஆண்டு விஜய்யின் பிறந்தநாளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி தெருவில் பிறந்த நாள் போஸ்டர் கூட ஒட்ட முடியாத அளவுக்கு சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

vijay,birthday,bigil,france,germany ,விஜய்,பிறந்தநாள்,பிகில்,பிரான்ஸ்,ஜெர்மனி

இந்த நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி ஜூன் 22ஆம் தேதி முதல் ஜுன் 30 ஆம் தேதி வரை விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'பிகில்' படத்தை திரையிட அந்நாட்டு விஜய் ரசிகர்கள் முயற்சி எடுத்துள்ளனர்.

அந்த வகையில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் அரசின் சிறப்பு அனுமதியை பெற்று அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு அந்நாட்டின் திரையரங்குகளில் 'பிகில்' திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Tags :
|
|
|