- வீடு›
- பொழுதுபோக்கு›
- விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ உலக அளவில் ரூ.100 கோடியை வசூல்
விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ உலக அளவில் ரூ.100 கோடியை வசூல்
By: vaithegi Thu, 05 Oct 2023 10:18:59 AM
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படம், கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தை மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்து உள்ளார்.
இதையடுத்து இதில் ரித்துவர்மா நாயகியாக நடித்துள்ளார். டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று கொண்டு வருகிறது. இதையடுத்து படம் வெளியான 5 நாளில் ரூ.50 கோடி வரை வசூலித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், படம் வெளியாகி 19 நாட்கள் ஆன நிலையில், உலக அளவில் படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், இப்படம் இந்தியிலும் வெளியிடப்பட்டது.
எனவே இதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டத்தாக விஷால் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்த படம் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்திருப்பது கவனிக்கத்தக்கது.