Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • விஜய் மற்றும் சூர்யா குறித்து டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கூறியது என்ன?

விஜய் மற்றும் சூர்யா குறித்து டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கூறியது என்ன?

By: Monisha Thu, 09 July 2020 12:00:26 PM

விஜய் மற்றும் சூர்யா குறித்து டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கூறியது என்ன?

முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவரான பிருந்தா தனது சமூக வலைத்தளத்தில் விஜய் மற்றும் சூர்யா குறித்து பதிவு செய்துள்ள கருத்துகள் தற்போது வைரலாகி வருகிறது

விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, இந்த புகைப்படம் விஜய்யுடன் ’சர்க்கார்’ படத்தில் பணிபுரிந்த போது எடுத்தது. அவருடன் பல படங்களில் நான் பணி செய்து வந்துள்ளேன். அவர் மிக ஒரு எளிமையான நபர், அவர் அதிகம் பேச மாட்டார் ஆனால் அவரது நம்பிக்கை மிகுந்த முயற்சி மற்றும் கடினமான உழைப்பு பலரையும் பேசவைக்கும். மிகவும் புத்திசாலித்தனமான அதே நேரத்தில் எளிமையான மனிதர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படமும் பிருந்தாவின் இந்த பதிவும் தற்போது வைரலாகி வருகிறது.

vijay,surya,dance master brinda,photo ,விஜய்,சூர்யா,டான்ஸ் மாஸ்டர் பிருந்தா,புகைப்படம்

அதே போல் சூர்யாவுடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ள டான்ஸ் மாஸ்டர் பிருந்தா "சூர்யாவுடன் கஜினி, காக்க காக்க, ஆய்த எழுத்து, தானா சேர்ந்த கூட்டம் உள்பட ஒருசில படங்களில் பணிபுரிந்துள்ளேன். நான் பார்த்த நடிகர்களில் எளிமையானவர் மட்டுமின்றி பெண்களுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பவர் என்று அவர் கூறினார்

தற்போது டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ’ஹேய் சினாமிகா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைத்ரி, காஜல் அகர்வால் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

Tags :
|
|