Advertisement

சன் பிக்சர்ஸ் வெளியிட போகும் மெகா அறிவிப்பு என்ன?

By: Monisha Thu, 10 Dec 2020 3:53:28 PM

சன் பிக்சர்ஸ் வெளியிட போகும் மெகா அறிவிப்பு என்ன?

சமூக வலைதளத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பு நாளை காலை 11.07 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சன் பிக்சர்ஸின் இந்த மெகா அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தை தயாரித்து வருகிறது. எனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிவிப்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

sun pictures,fans,rajini,vijay,surya ,சன் பிக்சர்ஸ்,ரசிகர்கள்,ரஜினி, விஜய், சூர்யா

அதேபோல் 'தளபதி 65' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதால் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பும் உள்ளது. மேலும் தனுஷ் மற்றும் சூர்யாவின் படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதால் இந்த இரண்டு படங்களில் ஒன்றின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எனவே நாளை வெளியாகும் அறிவிப்பு ரஜினி, விஜய், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்களில் எந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் அல்லது நான்கு அறிவிப்புகளும் வெளியாகுமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Tags :
|
|
|