Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இயக்குனர் வெற்றிமாறன் இயக்குனர் அமீரை சந்தித்து பேசியதன் காரணம் என்ன?

இயக்குனர் வெற்றிமாறன் இயக்குனர் அமீரை சந்தித்து பேசியதன் காரணம் என்ன?

By: Nagaraj Tue, 28 Nov 2023 8:32:26 PM

இயக்குனர் வெற்றிமாறன் இயக்குனர் அமீரை சந்தித்து பேசியதன் காரணம் என்ன?

சென்னை: இயக்குனர் அமீரை நேரில் சந்தித்து பேசியுள்ளார் வெற்றிமாறன். இதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.

photography,character,vadivasal,director aamir,encounter,reason ,புகைப்படம், கதாபாத்திரம், வாடிவாசல், இயக்குனர் அமீர், சந்திப்பு, காரணம்

இவர் தற்போது சூரியின் விடுதலை-2 படத்தை இயக்கி வருகிறார். தொடர்ந்து சூர்யாவின் 'வாடிவாசல்' பட பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் 'வாடிவாசல்' திரைப்படத்தில் இயக்குனர் அமீர் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன், அமீரை நேரில் சந்தித்துள்ளார். அதாவது, இயக்குனர் வெற்றிமாறன் அமீரை நேரில் சந்தித்து 'வாடிவாசல்' திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் குறித்து கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அமீருக்கு ஏற்றபடி கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவர்கள் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags :