- வீடு›
- பொழுதுபோக்கு›
- யாருப்பா அது... இந்தவாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போவது யாருப்பா?
யாருப்பா அது... இந்தவாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போவது யாருப்பா?
By: Nagaraj Wed, 19 Oct 2022 5:31:37 PM
சென்னை: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து மகாலட்சுமி வெளியேறுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக்பாஸ் 6வது சீசன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியில் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி 1 மணி நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஓடிடியில் 24 மணி நேரமும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.
அசல், குயின்ஸியிடம் தவறாக நடந்து கொள்கிறார் என ரசிகர்கள் இப்போது பல வீடியோக்களை வெளியிட்டு கோபப்பட்டு வருகின்றனர். இந்த வாரம் இதுகுறித்து கமல்ஹாசன் பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இன்னொரு பக்கம் வீட்டில் இருந்து எலிமினேட் செய்ய இருப்பவர் பற்றிய தகவல் வெளியாகி வருகிறது. தனலட்சுமியை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்துவந்த நிலையில் இப்போது மகேஸ்வரி தான் வீட்டைவிட்டு செல்ல வேண்டும்.
எல்லோரின் விஷயத்திலும் மூக்கை நுழைத்து வருகிறார் என ரசிகர்கள் கோபமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். எனவே இந்த மகேஸ்வரி எலிமினேட் ஆக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.