Advertisement

விஜய்சேதுபதியின் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா?

By: Monisha Thu, 10 Sept 2020 12:15:51 PM

விஜய்சேதுபதியின் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா?

விஜய்சேதுபதி நடித்த திரைப்படம் ஐந்து மொழிகளில் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது தென்னிந்திய நடிகராகவும் பாலிவுட் நடிகராகவும் மாறிவிட்டார். இவர் ஏற்கனவே சயிர நரசிம்ம ரெட்டி உள்பட ஒரு சில தெலுங்கு படங்களிலும், மலையாள படங்களிலும் கன்னட படங்களிலும் அவர் நடித்துள்ளார். மேலும் அமீர்கான் நடித்து வரும் பாலிவுட் படத்திலும் அவர் நடித்து வருவதால் தற்போது அவர் அகில இந்திய ஸ்டாராக மாறிவிட்டார்.

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்த ஒரு திரைப்படம் ஐந்து மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளதாக வந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

vijay sethupathi,film,ott,five language,aishwarya rajesh ,விஜய்சேதுபதி,திரைப்படம்,ஓடிடி,ஐந்து மொழி,ஐஸ்வர்யா ராஜேஷ்

விஜய்சேதுபதி நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்களில் ஒன்று க/பெ ரணசிங்கம். இந்த திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் டப் செய்யப்பட்டு இருப்பதாகவும் ஓடிடியில் ஐந்து மொழிகளிலும் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை விருமாண்டி இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|