- வீடு›
- பொழுதுபோக்கு›
- இணையத்தில் உலா வரும் விஜய்யின் இளமைக்கால புகைப்படம்
இணையத்தில் உலா வரும் விஜய்யின் இளமைக்கால புகைப்படம்
By: Nagaraj Mon, 08 June 2020 3:26:16 PM
விஜய் நடிக்கும் படம் மட்டுமல்ல.. விஜய் பற்றிய எந்த தகவல்களாக இருந்தாலும் அதை இணையத்தில் வெகு வேகமாக பரவ செய்து விடுவார்கள் ரசிகர்கள். தற்போது ஊரடங்கு காலத்தில் விஜய்யின் பழைய புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகி கலக்கி வருகிறது.
கடந்த வருடம் தீபாவளி பண்டிகையில் வெளியான பிகில் திரைப்படம் வசூல் சாதனை புரிந்தது. இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும் ஊரடங்கு முடிந்து திரையரங்குகளில் திறக்கப்பட்டவுடன் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் விஜய்யின் புகைப்படம் ஒன்று வெகு வேகமாக பரவி வருகிறது. இதில் விஜய் 16 வயதில் எடுக்கப்பட்ட படம் தான் அது. கடற்கரையில் விஜய் நிற்பது போல் இருக்கும் இந்த படத்தை ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.