Advertisement

பலவகையான பட்டுப்புடவை ரகங்கள் உங்களுக்காக..!

By: Monisha Tue, 29 Dec 2020 3:38:23 PM

பலவகையான பட்டுப்புடவை ரகங்கள் உங்களுக்காக..!

பட்டுப்புடவை இந்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் குறிக்கிறது. இந்த பட்டுப்புடவையை நாம் பெரும்பாலும் பண்டிகை நாட்களிலும் விசேஷ நாட்களிலும் அணிந்து செல்வது வழக்கம். உங்கள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் இந்த பட்டுப் புடவையை அணிந்து செல்ல உங்களுக்கு ஆசை இருந்தால் அதன் வகைகளைப் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம். இந்த பதிவில் பலவகையான பட்டுப்புடவை ரகங்கள் குறித்து பார்க்கலாம்!

பனாரஸ் பட்டு புடவை
தனது திருமண நாளன்று ஒரு திகைப்பூட்டும் தோற்றத்தில் தோன்றும் எண்ணம் இருக்கிறதா? அதை நிறைவேற்றும் வகையில் உள்ளது இந்த பனாரஸ் பட்டு. இதன் விரிவான வடிவமைப்புகளுடன் சிறந்த தரத்தில் இதை நெய்வதுதான் இதன் சிறப்பு . இதில் கட்ஒர்க் , தஞ்சொய், புடிடார், ஜங்களா மற்றும் வஸ்கட், பனாரசி புடவைகளின் சில வகைகள் ஆகும். வெள்ளி மற்றும் தங்கத்தில் இந்த புடவைகளின் பள்ளுவில் இருக்கும் வடிவமைப்புகள் தான் இதன் சிறப்பம்சம். பனாரஸ் பட்டுப் புடவையை நீங்கள் அணியும்போது உங்கள் தனித்துவத்தை நிச்சயம் இது முன்வைக்கும்.

silks,banaras,mysore silk,kanchipuram,fashion ,பட்டுப்புடவை,பனாரஸ்,மைசூர் சில்க்,காஞ்சிபுரம்,பேஷன்

மைசூர் சில்க்
மல்பெரி எனும் பட்டை கொண்டு தயாரிக்கப்படும் மைசூர் பட்டுப் புடவைகள் முக்கியமாக கர்நாடகா மாநிலத்தில் 70 % வரை தயாரித்து வருகிறது. இது இந்தயாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை முக்கியமாக குறிக்கிறது. இந்த மைசூர் பட்டுப் புடவைகளின் சிறப்பம்சம் என்னவென்றால் இதன் தூய்மையான பட்டு, இதன் தங்க ஜரிகை மற்றும் உயர்தரம் ஆகியவைதான்.

காஞ்சிபுரம் பட்டு புடவை
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் நகரத்தில் உற்பத்தியாகும் காஞ்சிபுரம் பட்டு புடவைகள் இந்தியாவின் பழமை வாய்ந்த புகழ் பெற்ற பட்டு புடவைகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் பெருமை வாய்ந்த பட்டு ரகங்களில் ஒன்றாகும். இதை முதலில் தங்கம் மற்றும் சிவப்பு நிறங்களில் மட்டுமே செய்து வந்தனர். பிறகு பல நிறங்களில் நெய்ய துவங்கினர். இதை தென் இந்தியாவில் மணமகள்கள் முக்கியமாக தனது திருமண நாளில் அணிந்து கொள்ளும் பட்டு புடவை ஆகும். இதன் சிறப்பான வடிவமைப்பு, தூய்மையான பட்டு மற்றும் இதன் கம்பீரமான தோற்றம் அளிக்கும் வடிவமைப்புகள், இதன் செழுமை இவை அனைத்தும் வேறு எந்தவிதமான பட்டிலும் காண முடியாது. இந்த புடவைகளை உயர்தர பட்டு நூலில் நெய்வதனால் இது அவ்வளவு எளிதில் கிழிந்து போகாது. மேலும் இது நீண்ட காலம் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

silks,banaras,mysore silk,kanchipuram,fashion ,பட்டுப்புடவை,பனாரஸ்,மைசூர் சில்க்,காஞ்சிபுரம்,பேஷன்

போச்சம்பள்ளி பட்டு புடவை
பட்டு புடவைகளில் நீங்கள் கொஞ்சம் மார்டெனாக தேடிக்கொண்டிருந்தால் போச்சம்பள்ளி பட்டுப் புடவைகளை நீங்கள் வாங்கலாம். இது ஆந்திரா மாநிலத்தில் டெலெங்கான நகரத்தில் உற்பத்தியாகும் சேலை. இதில் இதன் விரிவான வடிவியல் வடிவமைப்புகள் இந்த ரக சேலையின் தனித்துவத்தை முன்வைக்கிறது. இன்றைய நவீன பெண்மணிகளின் பாரம்பரிய தோற்றத்திற்கு ஏற்ற பட்டுப்புடவை இதுவே.

செட்டிநாடு சேலைகள்
மற்றொரு பாரம்பரியமிக்க சேலை ராகங்களில் ஒன்றுதான் இந்த செட்டிநாடு பட்டு புடவைகள். இதில் நீங்கள் பளிச்சிடும் நிறங்கள், கட்டம்போட்ட வடிவங்கள், பெரிய பார்டர்கள் என்று பல வகைகளைப் பார்க்கலாம். இவை அனைத்தும் தமிழ்நாட்டின் காரைக்குடி செட்டிநாடு கலாச்சாரத்தை குறிப்பிடும் வகையில் அமைந்திருக்கும் பழமைவாய்ந்த பிரபலமான சேலைகள் ஆகும். இலகுவான இடை கொண்ட பட்டுப் புடவைகளை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால் இதுவே அதற்கு பொருத்தமானது.

Tags :
|