சகோதரர்களிடம் மேலோங்கி நிற்கும் அன்பும், நட்புணர்வும்!!
By: Nagaraj Mon, 11 July 2022 6:53:35 PM
சென்னை: சகோதரர்களை பெற்றிருப்பது உற்ற நண்பர்களைப் பெற்றிருப்பதைப் போன்றதே. இவர்கள் தான் குழந்தைப் பருவத்தின் முக்கியமான பகுதிகளாக இருப்பார்கள். இவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான விளைவுகளை சகோதர உறவால் எதிர் கொண்டிருப்பார்கள். ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்ட சகோதரர்களிடம் ஒரு கலவையான அன்பும், நட்புணர்வும் விளங்கி வரும்.
ஒரே ஒரு குழந்தையை மட்டும் கொண்ட குடும்பங்களில் சகோதர உறவுகள் இல்லையென்பதால், அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான மற்றும் அற்புதமான உறவையும், சகோதர அல்லது சகோதரி பாசத்தையும் இழந்து விடுகிறார்கள்.
சகோதரர்கள் இருவருமே பிறந்ததில் இருந்தே ஒருவரையொருவர் அறிவார்கள். சகோதர உறவு முறைகள் ஒட்டு மொத்த குடும்பத்தின் நிலையையும் உணர முடியும். தங்களுக்குள் நல்ல புரிந்துணர்வுடன் இல்லாத உறவுகளை கொண்ட குடம்பத்தினர்களை உடைய சகோதரர்களின் வாழ்க்கை சற்றே மன வேறுபாடுகளுடனேயே இருக்கும். அதே சமயம், மிகவும் நல்ல புரிந்துணர்வுடன் இருக்கும் குடும்பங்களில் உள்ள சகோதரர்கள், நட்புக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள்.
எனவே தான் ஒரு குழந்தையின் மன மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு சகோதர உறவு முறை மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த கட்டுரையில் சகோதர உறவு முறை ஏன் முக்கியமானதாக உள்ளது. இதனை விளக்குவதற்கு சில காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:
நண்பன், வழிகாட்டி மற்றும் ஆசான்: சகோதரர்கள் தங்களுக்குள் ஆரோக்கியமான உறவை பராமரிக்க வேண்டும். சகோதரர் அல்லது சகோதரிகள் தான் தனிமையில் இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் உற்ற நண்பர்களாவார்கள். அவர்கள் உங்களை புரிந்து கொள்வதுடன், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் விளக்கமாக தெரிந்தும் வைத்திருப்பார்கள்.
நீங்கள் குழப்பத்தில் இருக்கும் வேளைகளில் சகோதரர்கள் உங்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பார்கள். கடினமான நேரங்களில் ஒரு நல்ல ஆசானாகவும, வழிகாட்டியாகவும் சகோதரர்கள் இருப்பார்கள். இந்த குணங்களை கொண்ட சகோதரர்கள் நண்பர்களாகவும், அன்பு கொண்டவர்களாகவும் பாசத்துடன் இருப்பார்கள்.
உணர்வு ரீதியான ஆதரவு: சகோதரர்கள் ஒரே மாதிரியான குடும்ப சூழல் மற்றும் மனநிலையில் வளர்க்கப்படுகிறார்கள். இது அவர்களின் ஒட்டுமொத்த மன மற்றும் கலாச்சார வளர்ச்சியும் ஒரே மாதிரியாக இருக்க வகை செய்கிறது.
இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்திருக்கவும் உதவுகிறது. இவர்கள் உறவினர்கள் மட்டுமல்லாமல், இருவரும் தங்களுக்குள் மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஆதரவாக இருக்க முயலுவார்கள். அவர்களுக்குள் சொந்தமாக ஏதாவது பிரச்னைகள் ஏற்படும் போதும், குடும்ப பிரச்னைகளின் போதும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள்.