Advertisement

வெள்ளி நகைகளில் உள்ள அற்புதமான டிசைன்கள், வடிவங்கள்

By: Karunakaran Fri, 16 Oct 2020 7:29:47 PM

வெள்ளி நகைகளில் உள்ள அற்புதமான டிசைன்கள், வடிவங்கள்

தங்கம் மட்டுமின்றி வெள்ளி நகைகளிலும் எத்தனையோ டிசைன்கள், வடிவங் கள் என்று அற்புதமான நகைகள் வந்து விட்டன. வெள்ளியிலும் பழமையான நகைகள், எத்னிக் நகைகள் மணப்பெண் அலங்கார நகைகள், பாரம்பரிய நகைகள் என அனைத்தும் வந்துவிட்டன. வெள்ளி ஹாரத்தில் கையகல டாலர்கள். டாலர்களின் ஓரத்தில் சலங்கைகள். ஒரு டாலரின் கீழே இணைக்கப்பட்ட மற்றொரு பெரிய டாலர். அடர்த்தியான நிறமுள்ள பிளெயின் சேலைகளுடன் இந்த ஹாரமானது அணிந்து சென்றால் மிகவும் அருமையாக இருக்கும்.

இரண்டு சரமாக மெல்லிய வெள்ளிச் செயின், அதன் இடையிடையே வெள்ளிக் குண்டுகள் கீழே அழகிய பெரிய அகலமான டாலர். அதன் கீழ்ப்புறத்தில் சலங்கைகளும், வெள்ளிச்செயினும் தொங்குவது போல் வடிவமைத்திருப்பது அற்புதம் என்று சொல்லலாம். சிறிய லக்‌ஷ்மியானது ஒன்றன் கீழ் ஒன்றாக இணைக்கப்பட்ட ஹாரத்திற்கு இரண்டு மயில்கள் ஒட்டிக்கொண்டிருக்க அதன் கீழே லக்‌ஷ்மி அருள் பாலிக்கிறார். இந்த டாலரின் கீழ் சிவப்பு கற்கள் பதித்திருக்க, அந்த ஒவ்வொரு கற்களின் கீழும் முத்துக்கள் தொங்குகின்றன.

designs,patterns,silver jewelry,womens ,டிசைன்கள், வடிவங்கள், வெள்ளி நகைகள், பெண்கள்

காசுமாலையை வெள்ளியில் அணிந் தால் கட்டாயம் நன்றாகத்தான் இருக்கும். இவை ஒரே சரமாகவும், பல அடுக்குச் சரங்களாகவும் உள்ளன. இந்தக் காசுமாலைகளை சேலை, பாவாடை தாவணியோடு மட்டுமல்லாமல் சல்வார் சூட், லாங் ஃப்ராக், மட்டுமல்லாமல் குர்த்தி என எதனுடனும் பொருத்தி அணிந்து கொள்ளலாம். வெள்ளி குந்தன் ஹாரங்களின் அழகை சொல்ல வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். சிறிய குந்தன் கற்கள் பதித்த ஹாரங்கள் ஒரு விதமான அழகு என்றால் பெரிய குந்தன் வேலைப்பாட்டுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஹாரங்கள் அழகோ அழகு. பதக்கங்கள் இல்லாமல் வரும் ஆரங்களும் பார்க்க ஒரு கவுரவமான மிடுக்கான தோற்றத்தைத் தருவதாக உள்ளன.

வெள்ளியில் “ஹூப்ஸ்” என்று சொல்லப்படும் வளையங்கள், தொங்கட்டான்கள், “டேங்கிள்ஸ்” என்று அழைக்கப்படும் நீளமாகத் தொங்கும் காதணிகள் “சான்டிலியர்” மாடல்கள், ஹக்கிஸ் மாடல், டியர் ட்ராப் மாடல், ‘இயர் கஃப்ஸ் எனப்படும் காது மடல்களுக்கும் செய்யப்பட்டிருக்கும் காதணிகள், கம்மல் அணிகின்ற துவாரம் வழியாக நுழைக்கப்படும் செயினானது துவாரத்தின் இருபக்கமும் தொங்குவது போல சில சமயங்களில் காதின் முன்புறத்தில் தொங்கும் செயினில் கற்கள் அல்லது மணிகள் இணைக்கப்பட்ட ‘த்ரெட்டர்’, “சந்த்பாலி” எனப்படும் சந்திர வடிவில் வட்டமாக இருக்கும் காதணிகள் எனப்பல மாடல்களில் வெள்ளியால் செய்யப்பட்ட காதணிகள் விற்பனை செய்யப் படுவதோடு அதைப் பெண்கள் விரும்பி அணிகிறார்கள் என்பது கூடுதல் தகவலாகும்.

Tags :