Advertisement

உடல் எடையை குறைக்கும் அற்புதமான ஜூஸ்!

By: Monisha Thu, 22 Oct 2020 10:12:39 AM

உடல் எடையை குறைக்கும் அற்புதமான ஜூஸ்!

உடல் எடை அதிகமானவர்கள் தங்களுடைய உடல் எடையை குறைக்க பல வழிமுறைகளை பின்பற்றுவார்கள். ஆனால் அவை பலனளிப்பதில்லை. இயற்கை வழிமுறையில் செய்யப்படும் சில உணவுகள், சூப்கள், பழச்சாறுகள், பொடிகள் போன்றவை நல்ல முன்னேற்றத்தை உடல் எடை குறைப்பதில் கொடுக்கிறது. என்னதான் நீங்கள் உடல் எடை குறைக்கும் பொருட்களை உட்கொண்டாலும் சிறிது உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அது வேகமாக உடல் எடையை குறைக்க முடியும். இந்த பதிவில் உடல் எடையை குறைக்கும் ஒரு அற்புதமான ஜூஸ் பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
புதினா, எலுமிச்சம் பழம், உப்பு, ஜீரகம், மிளகு தண்ணீர்.

செய்முறை: முதலில் புதினா இலையை 2 ஸ்பூன் அளவுக்கு ஜூஸ் கிடைக்கும் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள். இலைகளை மட்டும் தனியாக எடுத்து அதை நன்றாக கழுவி அதை மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டும். வெறும் புதினா இலைகளை அரைத்து சாறு எடுக்க கொஞ்சம் கஷ்டம் அதனால் தேவைக்கு கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து கொள்ளலாம். அதன் பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை வெட்டி ஜூஸ் ஆக எடுத்து கொள்ளுங்கள்.

body weight,mint,lemon fruit,salt,health ,உடல் எடை,புதினா, எலுமிச்சம் பழம், உப்பு,ஆரோக்கியம்

அடுத்தபடியாக 1/2 டேபிள் ஸ்பூன் ஜீரகத்தை எடுத்து அதை லேசாக வறுத்து அதையும் பொடியாக்கி வைத்து கொள்ள வேண்டும். 1/2 மிளகையும் நன்றாக பொடித்து வைத்து கொள்ளுங்கள். ஒரு கப் தண்ணீரில் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள். அதன் கூட புதினா ஜூஸ் 2 ஸ்பூன் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு பொடி 1/2 ஸ்பூன் சேர்த்து கொள்ள வேண்டும். வறுத்து அரைத்த ஜீரகப்பொடியை 1/2 ஸ்பூன் சேர்த்து கொள்ள வேண்டும். உப்பு சிறிதளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்

இந்துப்பாக இருப்பது நல்லது. உப்பை குறைந்த அளவில் சேர்த்தால் மட்டுமே இது நல்ல பலனை தரும். இதை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த ஜூசை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த ஜூஸை குடிக்கும் அரை மணி நேரத்திற்கு முன்பு எதுவும் சாப்பிட கூடாது. அதுபோல் ஜூஸ்
குடித்த அரை மணிநேரத்திற்கு பின்னரே வேறு உணவுகள் சாப்பிட வேண்டும். 3 நாள்களிலேயே நல்ல மாற்றங்கள் தெரியும். கூடவே தினமும் செய்யும் லேசான உடற்பயிற்சிகளையும் நடை பயிற்சியையும் செய்து வாருங்கள்.

Tags :
|
|