Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

By: Nagaraj Sat, 23 July 2022 09:24:02 AM

பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதே சிறந்தது. ஊறவைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களின் அளவு அதிகரிக்கும்.

பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ, நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், புரதம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதே சிறந்தது. ஊறவைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களின் அளவு அதிகரிக்கும். பாதாமை ஊறவைக்கும்போது அதன் கடினத்தன்மை மென்மையாக மாறிவிடும்.

அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படும். எளிதில் ஜீரணமாகிவிடவும் செய்யும். பாதாமின் வெளிப்புற தோலில் இருக்கும் டானின், ஊட்டச்சத்துகளை உறிஞ்ச விடாமல் தடை செய்யும் தன்மை கொண்டது.

almonds,soaked,fats,appetite,body weight,nutrients ,பாதாம், ஊற வைத்து, கொழுப்புகள், பசி, உடல் எடை, சத்துக்கள்

பாதாமை நீரில் ஊறவைத்துவிட்டு தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதன் மூலம் அதில் இருக்கும் சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படும். அதனால் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதே சிறந்ததாக கருதப்படுகிறது. பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ, நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், புரதம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதனால் பாதாம் ஒரு சூப்பர் உணவாக கருதப்படுகிறது. இதில் உள்ள புரதம் நீண்ட நேரம் உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் அதில் உள்ள மாங்கனீசு எலும்புகளை வலுப்படுத்தவும், ரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகிறது.


இரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாதாமை ஊறவைப்பதன் மூலம் அதில் இருக்கும் பைடிக் அமிலத்தையும் குறைக்க முடியும். இந்த அமிலம் கால்சியம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்களை உறிஞ்சுவதற்கு இடையூறாக அமையும்.

பாதாமில் இருக்கும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் பசியை தடுக்கக்கூடியவை. அதனால் சாப்பிடும் உணவின் அளவை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

Tags :
|
|