Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய சிறந்த ஆகாரங்கள்

கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய சிறந்த ஆகாரங்கள்

By: Nagaraj Sat, 27 Aug 2022 11:38:05 AM

கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய சிறந்த ஆகாரங்கள்

சென்னை: கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ளத்தக்க சிறந்த ஆகாரங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

புடலம் பிஞ்சு, அவரைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய் வாழைக்கச்சல், மாவடு, சேனை, கருணை, உருளைக்கிழங்கு, பாலபிஞ்சு, சிறுகீரை, அரைக்கீரை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணி, முளைக்கீரை, எலுமிச்சம்பழம், புளியாரை வேப்பம்பூ, கடுகு, பச்சைக் கொத்துமல்லி, துவரம் பருப்பு, பாதாம் பருப்பு, பச்சைப்பயறு, முந்திரிபருப்பு ஆகியவை கர்ப்பிணி பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியவை.

இதேபோல் மாம்பிஞ்சு, களாக்காய், நெல்லிக்காய், கச்ச நார்த்தங்காய், இஞ்சி, சுக்கு தட்டிப்போட்டுக் காய்ச்சிய அரிசிகஞ்சி, பாற்கஞ்சி, நெற்கஞ்சி, பாயாசம், மிளகு முதலியவை சேர்த்துச்செய்த தோசை, இட்லி, லட்டு, ஹல்வா, நல்ல கெட்டித் தேன், புதிய பசுநெய் அதிமதுரம், கரும்பு உள்ளிப்பூண்டு, முதலியனவாம்.

pregnant women,food,snacks,baby,happiness ,கர்ப்பிணி பெண்கள், உணவு, தின்பண்டங்கள், குழந்தை, ஆனந்தம்

இலவங்கப்பட்டை மட்டும் ஏழாம் மாதத்திற்குப் பிறகு பிரசவிக்கும்வரை உபயோகிக்கலாம், மிகப் புளிப்பும், கசப்பும் காரமும், உவர்ப்புமுள்ள பதார்த்தங்களை அதிகம் சேர்த்தல் கூடாது அஜீரணத்தை உண்டு பண்ணக்கூடியதும், அதிக நேரஞ்சென்ற பின்னர் ஜீரணமாகத்தக்கது, சூதக விருத்தி, மலபேடு ஜலபேதி முதலியவற்றை உண்டு பண்ணத்தக்கதுமாகிய பதார்த்தங்களை உண்ணுதல் கூடாது.

பால், சர்க்கரை, லேசான உப்புப்போட்டுப் பக்குவஞ் செய்த தின்பண்டங்கள், இன்னும் எளிதில் ஜீரணமாகத்தக்க வஸ்துக்கள் இவைகளைக் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம்.


வெங்காயம் தின்று வந்தால் குழந்தை அதிக விஷமம் செய்யும், கர்ப்பிணி அதிகமாய்த் தூங்காமலும், ஆனால், மிதமான நித்திரை, செய்துகொண்டும் நல்ல விஷயங்களையே நினைத்துக்கொண்டும் மனத்திற்கு நல்ல ஊக்கத்தையும், தைரியத்தையும், சாந்தத்தையும் கொடுத்து, அறிவையும் ஆனந்தத்தையும் விளைவிக்கும் அருமையான புஸ்தகங்களைப் படிக்கவேண்டும்.

Tags :
|
|
|